|
யுகவீதியில் நம் உரையாடல்
ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து
மற்றுமொன்றைச் சொல்கிறாய்
என்றபோதிலும்
யுகயுகமாய்
முடிவற்றுத் தொடருது நம் உரையாடல்ஸ
எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?
கண்ணாமூச்சி
எப்போதும்
சுழிதான் பிடித்திருக்கிறதுனக்கு
நெட்ட நெடுங்குத்தாய்
விடைத்திருக்கும் ஒன்று
பிடித்தமானதாயில்லை என்றும்!
சுழியின் வட்டக்கவர்ச்சியில்
வீழ்ந்துகிடக்கும் உன்னை
விடாது துரத்தியபடியிருக்கிறது ஒன்று-
ஒரு கோடாரியென!
நீயோ
தெறித்துத் தெறித்தோடுகிறாய்
உனக்கான மூலைமுடுக்குகளில்
எவ்விதமேனும்
தப்பித்துவிடும் முனைப்புடன்!
என்றுதான் முடியப்போகிறது
உனக்கும் ஒன்றுக்குமான
இக்காண்ணாமூச்சி?
கவிதை :
nilacharal.com
NEXT |