வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம்
  முகப்பு
 

அறிமுகம்

 

நோக்கம

 

சமர்ப்பணம்

  அறிவித்தல்கள்
  நிர்வாகம்
  விண்ணப்பப்படிவம
  புகைப்படதொகுப்பு
  கவிதைகள
  தொடர்புகளுக்கு
   
   
   
   
   
   

 

உங்களுடைய ஆக்கமும் இடம்பெற வேண்டுமா? vadd@vroswiss.com

பாமினி யுனிகோட் எழுத்து மூலம் எழுதி அனுப்பிவைக்கவும் தரமான கவிதைகளை பிரசுரிக்க காத்திருக்கின்றோம்

என்னை மறந்தனையோ

 
ஏக்கச் சிறகுகள் எடுத்து
ஏமாற்ற வானில் பறந்து
என்னுள் புதைந்தேன்
என்னை மறந்தனையோ ?
 

கண்களைத் தாவ விட்டு - என்
தாவணி மேய விட்டு
தென்றலைத் தூது விட்டு
நெஞ்சினைத் தவிக்க விட்டு
 

பூக்களை பறித்து
பூவிதழ் மருவி - கள்வன்
புன்னகை புரிந்ததும் ஏனோ
புண்ணாக்கி மறைந்ததும்....
 

நினவுகளின் மத்தியிலே
நீந்தியவன் தேனெந்தன்
கனவுகளின் கானகத்தே
கணாமல் போனவனோ ?
 

மறைந்திருந்து
பார்க்கையிலே
மந்தகாசப் புன்னகையால்
மயக்கி எனை மையலிலிட்டு
மறந்து இன்று சென்றனையோ
 

வரும் வழியோரம்
பாத்திருந்து - என்
விழியோரம் பூத்திருக்கும்
பாதையே இன்று வெறிச்சோடி
கண்ணீர்ப்பூக்கள்
நிறைந்திருக்கு
 

வேகமாய் வளர்ந்த காதல்
வெறுமையாய் போனதென்ன
வேதனையின் விளிம்பிலே
வெம்பி நானும் கரைவதென்ன...
 

ஒன்று கேட்பேன் உரைப்பாயே
ஒளிக்காமல் திறப்பாயே மனதை
காளையுனக்கு
காணிக்கையாக்கிய பின்
கன்னி என்னை மறந்தனையோ ? ....

கவிதை : சக்தி சக்திதாசன்

NEXT

 

 
    .                                                                   .                     .